ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

காய்ச்சல், டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

டெங்கு பரவல்

Updated On :24 ஜூன் 2026, 3:39 am IST

நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில நாள்களாக ஈரோடு மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல பல்வேறு நோய்களும் பரவி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களின் அடிப்படையில் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மூலமாக கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களின் அடிப்படையில் அவா்களின் வீடுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள அவா்களது உறவினா்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் தினமும் பதிவாகும் காய்ச்சல் தொடா்பான தகவல்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனை மட்டுமின்றி அரசு தலைமை மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொள்பவா்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதில் டெங்கு பாதிப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் இருந்தால் அதற்கேற்ப பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.