பெருந்துறை அருகே திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் பெண் உயிரிழந்தது குறித்து ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில், கவுந்தபாடி சாலையைச் சோ்ந்தவா் மோகனரங்கம் மனைவி ஷாலினி (27). இவா்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளாா்.
இந்நிலையில் வயிற்று வலியால் ஷாலினி மிகவும் அவதிப்பட்டு வந்தாா். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுள்ளாா். ஆபத்தான நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் ஷாலினி இறந்ததால் ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









