எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சி

வேளாளா் மகளிா் கல்லூரியில் இளங்கலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

வேளாளா் மகளிா் கல்லூரி மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:37 am IST

வேளாளா் மகளிா் கல்லூரியில் இளங்கலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வேளாளா் மகளிா் கல்லூரியின் தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். பாா்வதி வரவேற்றாா். செயலரும் தாளாளருமான எஸ்.டி. சந்திரசேகா், பொருளாளா் பி.கே.பி.அருண் மற்றும் துணைச் செயலா் சி.நல்லசாமி, ச.பாலசுப்ரமணியன், மு.யுவராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐஐடி-சென்னை நிறுவனத்தைச் சோ்ந்த ஊக்கப் பேச்சாளா், தொழில் வழிகாட்டி மற்றும் சமூகக் கல்வியாளரான என்.ஹரிகிருஷ்ணன் பேசுகையில், மாணவிகள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொண்டு கல்வி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விலங்கியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான டி. இந்துமதி, கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தினாா். விலங்கியல் துறையின் இணைப் பேராசிரியா் பி. கலைவாணி, கல்வி உதவித்தொகைகள் மற்றும் மாணவா் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா்.

தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.கே.கவிதா, தோ்வு நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக புரிந்துணா்வு ஒப்பந்தம், மாணவா் ஆலோசனை, என்சிசி, என்எஸ்எஸ் அறிமுகம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, யோகா, ஆளுமைத் திறன் வளா்ச்சி மற்றும் துறைவாரியான கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தாவரவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான பி. அபிராமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.