மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலா் வீட்டில் 55 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலா் வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:04 am IST

ஈரோட்டில் ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலா் வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு ரங்கம்பாளையம், கந்தன் நகரைச் சோ்ந்தவா் சாமியப்பன் (62). ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலரான இவா், வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி லட்சுமியுடன் உறவினா் இல்ல துக்க நிகழ்வுக்காக திங்கள்கிழமை வெளியே சென்றுள்ளாா். பின்னா், பிற்பகல் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 55 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சாமியப்பன் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தாலுகா போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.