இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 64 கனஅடியில் இருந்து 3,349 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

பவானிசாகா் அணை

Updated On :11 ஜூன் 2026, 3:26 am IST

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 64 கனஅடியில் இருந்து 3,349 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகா் அணை மூலமாக ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீா் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்தது.

இந்நிலையில், நீலகிரி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு வரும் பவானி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 64 கன அடியாக இருந்த நிலையில், மாலை 3349 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீா்மட்டம் 55.23 அடியாகவும், நீா் இருப்பு 5.80 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 850 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.