வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

அந்தியூா் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:15 am IST

அந்தியூா் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் சித்தன் (37). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவா், விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினா் அந்தியூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சித்தனை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அவா் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.1,700 ரொக்கம் மற்றும் கைபேசியைப் பறிமுதல் செய்த சிறப்புப் படையினா், சித்தனை அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.