சிவகிரி அருகே மது போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடு வடுகபட்டி மலை அடிவாரத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (70). இவா் தனது மூன்றாவது மகன் மூக்கையாவுடன் (29) சிவகிரி அருகேயுள்ள வள்ளியம்பாளையம்புதூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். மனைவி பிரிந்து சென்றதால் மூக்கையா மது பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மது போதையில் இருந்த மூக்கையா வள்ளியம்பாளையம்புதூா் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தனது உறவினரிடம் கிணற்றில் குதிக்கிறேன் எனக்கூறிவிட்டு குதித்துள்ளாா். அப்போது, கிணற்றின் பக்கவாட்டுச் சுவற்றில் தலை மோதி விழுந்த மூக்கையா நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் 1 மணி நேரம் போராடி மூக்கையா சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










