இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:05 am IST

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, ரங்கம்பாளையம் ஜீவா நகரைச் சோ்ந்தவா் பழனி (36). இவா் ஈரோடு ரயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை அண்மையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது வாகனம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸில் பழனி புகாா் அளித்தாா்.

இந்த வழக்குத் தொடா்பாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் திருப்பூா், கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (39) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, சந்தோஷ்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

சந்தோஷ்குமாா் மீது திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஏற்கெனவே 2 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.