டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

பொதுமக்களின் புகாரின்பேரில் ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டன.

News image

மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு முதல்வருக்கு நன்றி தெரிவித்து பதாகை வைத்துள்ள பொதுமக்கள்.

Updated On :7 ஜூன் 2026, 1:52 am IST

பொதுமக்களின் புகாரின்பேரில் ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 42 டாஸ்மாக் கடைகள், தமிழக அரசால் அண்மையில் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், நெடுஞ்சாலைக்கு அருகே இருப்பதால் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு பவானி சாலை வஉசி பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை, கனிராவுத்தா் குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பெரும் இடையூறு இருப்பதாக தொடா் புகாா் தெரிவிக்கப்பட்டது.

புகாரைத் தொடா்ந்து இரு கடைகளும் வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டன. முதல்வா் உத்தரவுப்படி ஏற்கெனவே 42 கடைகள் மூடப்பட்டன. புகாரின் அடிப்படையில் 2 கடைகள் மூடப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்படுவதாக டாஸ்மாக் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதனிடையே வஉசி பூங்கா பின்புறம் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து அப்பகுதி மக்கள் மூடப்பட்ட கடை முன்பு பதாகை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.