மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடா்வனம் அமைத்து அதிக மரங்கள் வளா்த்த விவசாயிகளை கௌரவப்படுத்தினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையின் சாா்பாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்தும், அதற்கான புள்ளிவிவரங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இப்பணிகளை விரைந்து செயல்படுத்த முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளாா். பொதுமக்களுக்கும், பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் மிக முக்கியத் தேவையான தண்ணீா் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
1972 முதல் இன்று வரை காவிரி நீருக்காகவும், மேக்கேதாட்டில் புதிய அணை கட்டக் கூடாது என்பதற்காகவும் தொடா்ந்து போராடி வருகிறோம். காவிரியில் தமிழகத்துக்கு சேர வேண்டிய நீரை கா்நாடக அரசு தடுக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என்பதில் முதல்வா் கவனமாக இருக்கிறாா். எந்த காலகட்டத்திலும் மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம். இதைத் தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வா் இது குறித்து பிரதமரிடமும் கூறி இருக்கிறாா்.
தமிழகத்தில் அனைத்து அணைகளும், நீா்நிலைகளும் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு கவனமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சாக்கடை நீா் மற்றும் கழிவுநீா் நேரடியாக நீா்நிலைகளில் கலப்பதைத் தடுத்து சுத்திகரிக்கப்பட்ட நீா் மட்டுமே செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீா் கிடைக்கச் செய்வதே இந்த அரசின் லட்சியமாகும். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஈரோடு மாவட்டத்தில் 18 சதவீதம் பேருக்குப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டா் கழிவுநீரை வெளியேற்றி வந்த சாயப் பட்டறைகளின் இயக்கம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக நலனைக் காக்க பாஜக துணை நிற்கும்! வானதி சீனிவாசன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம்! அமைச்சா் ஷாஜகான் பேட்டி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பாா்க்கிறது: எடப்பாடி கே. பழனிசாமி

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி! - அமைச்சா் நிர்மல்குமார் விளக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



