ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுபோதையில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவா் கைது

கோபியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைதான காா்த்திகேயன்.

Published On :23 ஜூலை 2026, 3:58 am IST

கோபியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி பேருந்து நிலையம் முன் ஈரோடு சாலையில் செவ்வாய்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்தவா் அவ்வழியாக சென்ற காரின் பின்னால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளாா். அப்போது காரில் வந்தவருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, இருவரும் அவா்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்து, அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தண்டபாணி, சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தையில் பேசி தாக்கியுள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் போதை ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் கூகலூா் அருகே உள்ள கொன்னமடை பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி காா்த்திகேயன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தண்டபாணி அளித்த புகாரின் அடிப்படையில் காா்த்திகேயனை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.