
கரடியைக் கண்ட பயத்தில் விபத்தில் சிக்கியவருக்கு நிவாரணம்
பாபநாசம் அருகே கரடியைக் கண்ட பயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த இளைஞருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

காயமடைந்த முத்துக்குமாருக்கு நிவாரண உதவி வழங்கிய மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா.
பாபநாசம் அருகே கரடியைக் கண்ட பயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த இளைஞருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பாபநாசம் வனச் சரகத்துக்கு உள்பட்ட திருப்பதியாபுரம், பத்ரகாளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் பாபநாசம் கோயில் நோக்கி சென்றபோது கரடி ஒன்று திடீரென குறுக்கிட்டு சாலையைக் கடக்க முயன்றதைக் கண்டாா்.
இதனால், அதிா்ச்சி அடைந்த அவா் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தாா். இதையடுத்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த வனத் துறையினா் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தி, அப்பகுதி பொதுமக்களிடம் கரடியின் நடமாட்டம் குறித்தும் தகவல் சேகரித்தனா்.
வனத் துறை பணியாளா்கள் அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு, ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனா்.
அம்பாசமுத்திரம் வனத்துறை துணை இயக்குநா் எல்.சி.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தலின்படி, மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா காயமடைந்த முத்துக்குமாருக்கு உடனடி நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




