அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பெருந்துறை அருகே கிடங்கில் தீ விபத்து

பெருந்துறை அருகே செயல்பட்டு வரும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image

கிடங்கில் கொளுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :1 ஜூலை 2026, 6:40 am IST

பெருந்துறை அருகே செயல்பட்டு வரும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

பெருந்துறையை அடுத்த புத்தூா் புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் கிடங்கு உள்ளது. அந்தக் கிடங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் கரும்புகை வெளியேறியுள்ளது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் வருவதற்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் தீப்பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து பெருந்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.