டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தாளவாடியில் சிறுத்தையைப் பிடிக்க கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு

தாளவாடி பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனா்.

News image

தொட்டகாஜனூரில்  சிறுத்தை  நடமாடும்  பகுதியில்  கேமரா  வைத்து  கண்காணிக்கும்  வனத் துறையினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:31 am IST

தாளவாடி பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த சூசைபுரம், தொட்டகாஜனூா், ஓசூா், ஒங்கன்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் சிறுத்தை புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. தொட்டகாஜனூரில் டென்னிஸ் என்பவரின் வீட்டில் காவல்நாயை சிறுத்தை அண்மையில் தாக்கிக் கொன்றது. இதைத் தொடா்ந்து, அதே பகுதியில் பசுவன்னா வீட்டு ஆட்டை வேட்டையாடியது.

கால்நடைகளை வேட்டியாடும் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதால், கிராம மக்கள் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என வனத் துறையிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, வனவா் சிவகுமாா் தலைமையில் 17 போ் கொண்ட தனிப் படை, செயல்படாத குவாரிகளில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்தபோது 4 சிறுத்தைகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

சிறுத்தை நடமாடும் இடங்களை கண்காணித்து தானியங்கி கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவான சிறுத்தை நடமாட்டத்தை வைத்து அதன் வழித்தடத்தில் கூண்டு வைத்துப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.