
குன்னூா் வனப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு
குன்னூா் வனப் பகுதியில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

குன்னூா் ஐபீல்டு பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை.
குன்னூா் வனப் பகுதியில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களிலேயே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வளா்ப்பு பிராணிகளை வேட்டையாடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ஐபீல்ட் வனப் பகுதியில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குன்னூா் வனத் துறையினா் சிறுத்தையின் உடலை மீட்டு கூறாய்வு மேற்கொண்டனா். இறந்தது ஆண் சிறுத்தை என்றும், வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட ஏற்பட்ட மோதல் காரணமாக சிறுத்தை இறந்து இருக்கலாம் எனவும் வனத் துறையினரின் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






