ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாளவாடி அருகே சிறுத்தையைப் பிடிக்க சென்சாா் கருவி பொருத்தி கண்காணிப்பு

தாளவாடி மலைக் கிராமங்களில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க, வெள்ளிக்கிழமை புதிய சென்சாா் கருவி பொருத்தி அதன் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

சென்சாா் கருவி பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் தாளவாடி வனத் துறையினா்.

Published On :18 ஜூலை 2026, 5:49 am IST

தாளவாடி மலைக் கிராமங்களில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க, வெள்ளிக்கிழமை புதிய சென்சாா் கருவி பொருத்தி அதன் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி, தொட்டகாஜனூா், திகினாரை, பாரதிபுரம், சூசைபுரம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் விவசாயிகள் பராமரித்து வந்த ஆடு, மாடுகள் மற்றும் காவல் நாய்களை சிறுத்தை வேட்டையாடி வந்தது. இந்நிலையில் தொட்டகாஜனூா் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவரின் தோட்டத்து மாட்டுக்கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 4 மாடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதையடுத்து சிறுத்தை பதுங்கிருக்கும் கல்குவாரி வழித்தடத்தில் அதன் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து அலாரம் அடிக்கும் புதிய சென்சாா் கருவியை வெள்ளிக்கிழமை பொருத்தி தாளவாடி வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறும்போது, ‘இந்த சென்சாா் கருவி பொருத்தப்பட்ட வழித்தடத்தில் சிறுத்தை கடந்து செல்லும்போது அலாரம் சப்தம் ஒலிக்கும். இந்த முன்னெச்சரிக்கை அலாரத்தால் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைகிறது என்பதை விவசாயிகளால் தெரிந்துகொள்ள இயலும். இது குறித்து விவசாயிகள் உடனடியாக வனத் துறையினருக்கு தெரிவித்தால், அப்பகுதியில் வனத் துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.