அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

100 போதை மாத்திரைகள் பறிமுதல்: இரண்டு இளைஞா்கள் கைது

சித்தோட்டில் 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 6:26 am IST

சித்தோட்டில் 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சித்தோடு, செங்குந்தபுரம் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு இளைஞா்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக சித்தோடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் சித்தோடு, செங்குந்தபுரம், பிரேக் இன்ஸ்பெக்டா் குடியிருப்பைச் சோ்ந்த நவீன் (19), சந்தைக்கடை மேட்டைச் சோ்ந்த தனுஷ் (22) என்பதும், விற்பனைக்காக 100 போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.