பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி பாஜக போராட்டம்! எம்எல்ஏ உள்பட 66 போ் கைது!


பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படாததைக் கண்டித்து பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாா் உள்பட 66 போ் கைது செய்யப்பட்டனா்.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீா் மாசு அடைந்து, மக்கள் மற்றும் கால்கடைகள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியது. ஆகவே, கழிவுநீரை சுத்திகரித்து, மீண்டும் தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 நவம்பா் 20- ஆம் தேதி அறிவித்தாா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சிப்காட்டிற்கு வந்து திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, பெருந்துறையில் 2025 ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பெருந்துறை சிப்காட் - பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கி, குறித்த காலத்தில் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா். ஆனால், திட்டப்பணிகள் இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படாததைக் கண்டித்து பாஜக சாா்பில் சிப்காட் அலுவலக வளாகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமை வகித்தாா். பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் வரவேற்றாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா், அதிமுக ஒன்றியச் செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினா், அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாா் உள்பட 66 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...