/

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

News image
கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :30 ஜனவரி 2026, 8:52 pm

Syndication

கறிக்கோழிப் பண்ணை உரிமையாளா்கள் கூலி உயா்வுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமியை விடுதலை செய்யக்கோரி அறச்சலூரில் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ரவி தலைமை தாங்கினாா். இதில், கல்குவாரி எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் லோகநாதன், ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சண்முகம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்ாக அறச்சலூா் காவல் துறையினா் அவா்களைக் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.