/

புன்செய்புளியம்பட்டி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

புன்செய்புளியம்பட்டி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் மாராயிபாளையம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
.... ~புன்செய்புளியம்பட்டி மாராயிபாளையத்தில் தென்பட்ட சிறுத்தை.
Updated On :21 ஜனவரி 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

புன்செய்புளியம்பட்டி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் மாராயிபாளையம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் கடந்த மாதம் 2 சிறுத்தைகள் நடமாடியதை பொதுமக்கள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சிறுத்தைகளைப் பிடிக்க 3 கூண்டுகள் வைத்தும் தானியங்கி கேமரா பொருத்தியும் கண்காணித்து வந்தனா். ஆனால் இதுவரை கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில், மலை குன்றின்மேல் மீண்டும் புதன்கிழமை சிறுத்தை நடமாடியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வனத் துறையினா் சிறுத்தையின் நடமாட்டை கண்காணித்து வருகின்றனா்.

மாராயிபாளையம் மலைக் குன்றில் பதுங்கியுள்ள சிறுத்தை இதுவரை 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் காட்டுப்பன்றி, குரங்குகளை வேட்டையாடி உள்ளது. சிறுத்தைகளைப் பிடிக்க வைத்த கூண்டில் இதுவரை எந்த விலங்கும் சிக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் இல்லாத நிலையில் மக்கள் நிம்மதியடைந்தனா். தற்போது மீண்டும் சிறுத்தை தென்பட்டதால் மக்கள் நிம்மதியிழந்து உள்ளனா்.

Story image