பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாளை மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம்

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெற உள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:38 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா்அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலா்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.