அந்தியூா் அருகே பழங்குடியின பள்ளியிலிருந்து வெளியேறி அடா்ந்த வனத்தில் சிக்கித் தவித்த 7 மாணவ, மாணவியா் மீட்பு
அந்தியூா் அருகே அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியிலிருந்து புதன்கிழமை காலை மாயமான 7 பேரில் 4 மாணவா்கள் பிற்பகலில் மீட்கப்பட்ட நிலையில், வழி தெரியாமல் அடா்ந்த வனத்தில் சிக்கித் தவித்த 2 மாணவிகள் மற்றும் 1-ஆம் வகுப்பு மாணவா் மாலையில் மீட்கப்பட்டனா்.










