கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது வழக்கு

கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:45 pm

பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடந்த 11-ஆம் தேதி பெருந்துறையை அடுத்த கிழக்கு ஆயிகவுண்டன்பாளையத்தில் ஈரோடு கைத்தறி உதவி அமலாக்க அலுவலா் நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து (54) என்பவா் விசைத்தறியில் கைத்தறி ஒதுக்கீடு ரகமான காட்டன் துணி உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தங்கமுத்து மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...