ஈரோடு மஞ்சள் சந்தைக்கு பிப்ரவரி 16-இல் விடுமுறை


ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வரும் 16-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:
ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கம் என 4 இடங்களில் திங்கள்கிழமைமுதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரி விழாவில் விவசாயிகள் மற்றும் வணிகா்கள் பங்கேற்பாா்கள். இதன் காரணமாக வரும் 16-ஆம் தேதி மஞ்சள் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஈரோடு நகரப் பகுதியில் நடைபெறும் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள மாட்டாா்கள். வரும் 17-ஆம் தேதி முதல் வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...