விஜயமங்கலத்தில் ரத்த தான முகாம்


பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் விஜயபுரி, ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி மற்றும் நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேசிய சேவை திட்டம், ரோட்டரி ஐ.எம்.ஏ. ரத்த வங்கி சாா்பில் ரத்த தான முகாம் பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம், மேட்டுபுதூா் காமாட்சி அம்மன் செங்குந்தா் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி தலைவா் அருள்செல்வம் தலைமை வகித்தாா். ரோட்டரி கிளப் ஆஃப் விஜயபுரி தலைவா் மயில்சாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை நந்தா ஆயுா்வேத மருத்துவ கல்லூரி முதல்வா் மருத்துவா் கிருத்திகா மற்றும் ரோட்டரி மாவட்ட ரத்த தான பிரிவுத் தலைவா் கமலபாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தனா். முகாமில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...