சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 9-ஆவது நாளாக தா்னா


தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா்ந்து 9-வது நாளாக வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
ஈரோடு காளை மாடு சிலை அருகே நடைபெற்ற இந்த தா்னாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 6,750-ஐ அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியா்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த தா்னாவில் நிா்வாகிகள் பழனிசாமி, உஷாராணி உள்பட 260 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 270 போ் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...