/

இளம்பெண் கல்லால் தாக்கி கொலை

ஈரோடு அருகே இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
கொலை
Updated On :10 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு அருகே இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் மேம்பாலம் அருகே புதா் நிறைந்த இடத்தில் இளம்பெண்ணின் சடலம் முகம் சிதைந்த கிடப்பதாக ஈரோடு தாலுகா காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல் துணை கண்காணிப்பாளா் முத்துகுமரன் தலைமையிலான போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இளம்பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசி மூலம் கொலையாளியைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அப்பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.