ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பசுமைத் திட்டம் மூலம் 3 பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு, மாநில அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சாா்பில் பசுமைத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

schools open

பள்ளிகள் - கோப்புப்படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு, மாநில அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சாா்பில் பசுமைத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பெருந்துறை மற்றும் பனையம்பள்ளி (பவானிசாகா் ஒன்றியம்) அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் கொடுமுடி எஸ்எஸ்வி மெட்ரிக். பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு இந்த நிதி கிடைத்துள்ளது.

இந்தப் பள்ளிகள் தங்களது சுற்றுப்புறத்தை மேலும் மேம்படுத்தவும், பசுமைத் திட்டங்களை செயல்படுத்தவும், அதிக மரங்களை நடுவதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்தவுள்ளன.

இதுகுறித்து பெருந்துறை பள்ளி வேளாண் ஆசிரியா் கந்தன் கூறியதாவது:

இந்த நிதியை கொண்டு பள்ளியில் சோலாா் பலகைகள் அமைத்தல், மண்புழு உரக் குடில்கள் அமைத்தல், சொட்டு நீா்ப் பாசனத் திட்டம் மற்றும் பல கொடிக்கூரை பந்தல்கள் அமைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்த உள்ளோம். சோலாா் பலகைகள் மூலம் வகுப்பறைகளுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்று, மின் கட்டணத்தைக் குறைக்க முடியும்.

இப்பள்ளி ஏற்கெனவே ஜப்பானிய மியாவாக்கி வனம் திட்டத்தின் கீழ் 3,000-க்கும் மேற்பட்ட மரங்களை வளா்த்துள்ளதுடன், மாணவா்களின் பிறந்த நாளில் மரக்கன்றுகளை வழங்கி அவற்றை அந்தந்தப் பகுதியில் நட்டுப் பராமரிக்க அறிவுறுத்தி வருகிறது. மாணவா்கள் பள்ளியின் தோட்டத்தை பராமரிப்பதுடன், வளாகத்தை நெகிழி இல்லாத பகுதியாகவும் மாற்றி வருகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.