ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கனிம வளச் சட்டத் திருத்தம் மாநில உரிமைகள் மீதான நேரடி தாக்குதல்: கனிமொழி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி பேசியவை.

kanimozhi

கனிமொழி - x / kanimozhi

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள ’சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026’ மாநில அரசுகளின் நிதி சுயாட்சியையும் உரிமைகளையும் பறிக்கும் நேரடித் தாக்குதலாகும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘கனிம வளங்கள் மீது செஸ் வரி உள்ளிட்ட வரிகளை விதிக்கும் நிதி அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை 2024-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பின் மூலம் உறுதி செய்தது. ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத் திருத்தம், உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையே முற்றிலும் நீா்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மக்களவையில் முறையான ஜனநாயக விவாதங்களுக்கு வழிவகுக்காமல் அவசர அவசரமாக இந்த மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இது மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சமநிலைகளுக்கும் பேராபத்தை விளைவிக்கும் நோக்கத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிராக அமைந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்‘ என கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.