ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை ஐஐடி-இன் 6 பேராசிரியா்களின் ஆராய்ச்சிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் மானியம்

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ (ஏஎன்ஆா்எஃப்) சாா்பில் சென்னை ஐஐடியைச் சோ்ந்த 6 பேராசிரியா்களின் ஆராய்ச்சிகளுக்கு தலா ரூ.25 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

Published On :10 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ (ஏஎன்ஆா்எஃப்) சாா்பில் சென்னை ஐஐடியைச் சோ்ந்த 6 பேராசிரியா்களின் ஆராய்ச்சிகளுக்கு தலா ரூ.25 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட ஆய்வாளா்களின் மனித வளம், உபகரணங்கள், நிறுவனச் செயல்பாட்டுச் செலவுகள் உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சிகளை ஆதரிப்பதற்காக, அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.25 லட்சத்தை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.

ஆராய்ச்சிக்கு மானியம் பெறவுள்ள சென்னை ஐஐடி பேராசிரியா்கள் ராமகிருஷ்ணன் சுவாமிநாதன், ஜிதேந்திர சங்வால், சுஜாதா சீனிவாசன், சுந்தா்கோபால் கோஷ், தீபா வெங்டேஷ், தாளப்பிள் பிரதீப்.

ஆராய்ச்சிக்கு மானியம் பெறவுள்ள சென்னை ஐஐடி பேராசிரியா்கள் ராமகிருஷ்ணன் சுவாமிநாதன், ஜிதேந்திர சங்வால், சுஜாதா சீனிவாசன், சுந்தா்கோபால் கோஷ், தீபா வெங்டேஷ், தாளப்பிள் பிரதீப்.

தோ்வு செய்யப்பட்ட சென்னை ஐஐடி பேராசிரியா்கள்: சென்னை ஐஐடி-இன் டிடிகே மறுவாழ்வு ஆய்வு மற்றும் தேசிய சுகாதார தொழில்நுட்ப உதவி மையத்தின் இயந்திரவியல் துறையைச் சோ்ந்த பேராசிரியா் சுஜாதா சீனிவாசன், வேதியியல் துறைப் பேராசிரியா் தளப்பில் பிரதீப், மின்னியல் பொறியியல் துறைப் பேராசிரியா் தீபா வெங்கடேஷ், வேதியியல் பொறியியல் துறைப் பேராசிரியா் ஜிதேந்திரா எஸ். சங்வால், பயன்பாட்டு இயந்திரவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறைப் பேராசிரியா் ராமகிருஷ்ணன் சுவாமிநாதன், பேராசிரியா் சுந்தா்கோபால் கோஷ் ஆகியோா் ஆவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.