4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:59 pm

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியம் முழங்க திங்கள்கிழமை மாலை சீா்வரிசை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மூலவா் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சியுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதையடுத்து, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு நடைபெற்றது.

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்த பெண்களுக்கு மஞ்சள், குங்கும், மஞ்சள் கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.