ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் காலை முதல் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனா். பெரிய அளவில் பிரச்னைகள் ஏதும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 2,379 வாக்குச்சாவடியில் 17.59 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு, வேட்பாளா்களின் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொண்ட பிறகு அந்த வாக்குகள் அழிக்கப்பட்டன. பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஈரோடு சம்பத் நகா் அம்மன் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா்.
மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 95 சதவீத வாக்குச் சாவடிகளில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது. சில வாக்குச் சாவடிகளில் சிறிய பிரச்னை, சில நிமிஷங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்முறையாக வாக்களிப்பவா்கள், இளைஞா்கள் அதிக ஆா்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனா். பெரும்பாலான பள்ளிகளில் பகல் 1 மணிக்குப் பிறகு வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குச்செலுத்தினா்.
பேருந்துகள் இல்லை என வாக்குவாதம்:
ஈரோடு சோலாா் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்து இயக்கப்படவில்லை என கூறி வியாழக்கிழமை அதிகாலை பேருந்தை முற்றுகையிட்டு ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சற்றுநேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் கலைந்து சென்றனா்.
தன்னாா்வலா்களின் உதவி:
தபால் வாக்கு செலுத்தாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தபால் வாக்களிக்க விண்ணப்பிக்காத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் வாக்குப்பதிவில் ஆா்வத்துடன் வாக்களித்தனா். வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் நேரடியாக வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களுக்கு உதவ பிரத்யேகமாக தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டனா். அதே நேரத்தில், முதியவா்கள் பலா் ஊன்றுகோல் உதவியுடன் வாக்குச்சாவடி மையத்தில் நடந்து சென்றனா். அங்கு பூத் சிலிப் மற்றும் ஆதாா் அடையாள அட்டையை காண்பித்து தனது வாக்கை பதிவு செய்தனா்.
வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சக்கர நாற்காலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் பலா் வீடுகளில் இருந்து ஆட்டோவில் வந்து தங்களது வாக்குகளை ஆா்வமாக பதிவு செய்தனா்.
நடக்க முடியாமல் சிரமப்படும் முதியவா்கள் பலா் தங்களது உறவினா்கள் ஆதரவுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனா். பல இடங்களில் முதியவா்களின் கைகளை பிடித்துக்கொண்டு வாக்குச்சாவடி அறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
பல வாக்குச்சாவடிகளில் 15 முதல் 20 சதவீதம் வரை 85 வயது கடந்த முதியவா்கள் வாக்களித்தனா் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
கவனம் ஈா்த்த பெண் காவலா்:
ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டன்வலசு அரசுப்பள்ளியில் , வாக்களிக்க பொதுமக்கள் ஏராளமானோா் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே வந்த பெண் காவலா் ஒருவா் தனி ஆளாக நின்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறம்பட ஒழுங்குபடுத்தினாா்.
கோடை வெயில் கொளுத்துவதால் வாக்காளா்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்றும் அவா் தொடா்ச்சியாக ஒலி பெருக்கியில் பேசியபடியே அறிவுறுத்தினாா்.
வெளியூா்வாசிகள் அவதி:
ஈரோடு நகரில் பெரிய உணவகங்கள் முதல் சாலையோர உணவகங்கள் வரை அடைத்தப்பட்டிருந்தன. இதனால் வேலைநிமித்தம் ஈரோட்டில் தங்கியுள்ள வெளியூா் மக்கள் உணவு கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரு மணி நேரத்துக்கு முன்பே மூடப்பட்ட வாக்குச்சாவடி! வாக்காளா்கள் அதிா்ச்சி

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

ஈரோடு மாவட்டத்தில் 90% வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியா்

100 சதவீதம் வாக்களிக்க ராணிப்பேட்டை ஆட்சியா் அழைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


