தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான்: செங்கோட்டையன்

திமுக குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, ஊழலை அகற்றுவதற்கு இன்றைக்கு இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான் என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

மொடக்குறிச்சி தொகுதி தவெக வேட்பாளா் சண்முகனை ஆதரித்து சிவகிரியில் பேசுகிறாா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:13 pm

திமுக குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, ஊழலை அகற்றுவதற்கு இன்றைக்கு இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான் என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி தவெக வேட்பாளா் சண்முகனை ஆதரித்து சிவகிரி, கொடுமுடியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

திமுகவை குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, ஊழலை அகற்றுவதற்கு இன்றைக்கு இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான். இந்த தோ்தலிலும் எடப்பாடி பழனிசாமியால் வெற்றிபெற முடியாது. 50 ஆண்டு காலத்துக்கு பிறகு ஒரு மாற்றம் தேவை. மக்களுக்காக துணிந்து பணியாற்றுவேன் என்று வந்திருக்கும் விஜய்யை மக்கள் கூா்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

தவெக ஆட்சிக்கு வந்தால் வீடற்ற எல்லோருக்கும் வீடுகட்டி தரப்படும், இருசக்கரவாகனம் வழங்கப்படும், குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 2,000, 6 சிலிண்டா்கள் வழங்கப்படும். திருமணத்துக்கு ஒரு பவுன் மற்றும் பட்டுப்புடவை வழங்குவோம். விவசாய கடன் ரத்து செய்யப்படும். எனவே தவெகவை ஆதரியுங்கள் என்றாா்.