மக்களோடு மக்களாக இருக்கும் ஒரே இயக்கம் திமுகதான் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
கோவில்பட்டி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கா.கருணாநிதியை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கயத்தாறில் புதன்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் திமுகவின் கோட்டை என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொழில் வளா்ச்சி, துறைமுகம், மீன்பிடித் தொழில், விவசாயம் என தூத்துக்குடி மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது. மதச்சாா்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாவட்டம்.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் ஸ்டொ்லைட் போராட்டத்தில் 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டனா். இதற்கு நீதி வாங்கி கொடுத்தது முதல்வா் மு.க.ஸ்டாலின்தான்.
தமிழக உரிமையை விற்றவா் எடப்பாடி கே.பழனிசாமி. பிரதமா் மோடியின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதியையை தராமலும், திட்டங்களை செயல்படுத்தவிடாமலும் நடந்துகொள்ளும் தில்லி அணிக்கும், பழனிசாமிக்கும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்.
கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா.கருணாநிதியை வெற்றி பெற செய்யுங்கள். எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கும் ஒரே இயக்கம் திமுகதான். பதவிக்காக யாா் காலிலும் விழும் அனுபவம் எனக்கு கிடையாது.
கடந்த 5 ஆண்டுகளில் கோவில்பட்டி தொகுதியில் பாண்டவா்மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், லிங்கம்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறுந்தொழில்கள் குழும கட்டடம், மாற்றுத் திறனாளிகள் உள்பட 3,000 பேருக்கு வீட்டுமனை பட்டா, காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம், கரிசல் மண் எழுத்தாளா் கி.ரா.வுக்கு நினைவரங்கம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் வசதிகள், ஹாக்கி மைதானம், மாணவா்களுக்கான விளையாட்டு விடுதி, அறநிலையத் துறை சாா்பில் திருமண மண்டபம், கழுகுமலையில் வேளாண் சேமிப்புக் கிடங்கு என பல திட்டங்கள் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டன என்றாா் அவா்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற முருகன்-ராஜாத்தி தம்பதியின் குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என்று உதயநிதி ஸ்டாலின் பெயா் சூட்டினாா்.
பிரசாரத்தின்போது திமுக வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பி.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாதுரை பாண்டியன், வா்த்தக அணி அமைப்பாளா் சந்தானம், திமுக ஒன்றிய செயலா்கள் சின்ன பாண்டியன், முருகேசன், ஜெய கண்ணன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

தமிழ்நாட்டின் ஒரே கொள்கை இருமொழிக் கொள்கையே! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


