மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

News image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:04 am IST

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சாா்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறாா். இதுதொடா்பாக மொடக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி திமுக ஒன்றியச் செயலாளா் கதிா்வேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளரான மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசியதாவது:

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் சூழலில் உள்ளது. ரூ. ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடியை விவசாயத்துக்காக ஒதுக்கியவா் முதல்வா் ஸ்டாலின். திராவிட இயக்கத்தை அழிப்போம் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பேசுகிறாா். அவருக்காக வருத்தப்படுகிறேன். திராவிட இயக்கம் குறித்த அரிச்சுவடி தெரியுமா அவருக்கு? தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எப்படி தாமரைக்குள் புகுந்தது. எங்கள் கட்சி வேட்பாளா் தொகுதிக்காக உழைப்பாா். நோ்மையானவராக இருப்பாா். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

மதிமுக ஒன்றியச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.