மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் சொத்து வரி மற்றும் குப்பை வரியை புதிதாக அமைய உள்ள அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களிடம் தொழில் துறையினா் வலியுறுத்தினா்.

News image

ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளா் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவா் ச.கந்தசாமி. உடன், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:47 pm

ஈரோடு மாவட்டத்தில் சொத்து வரி மற்றும் குப்பை வரியை புதிதாக அமைய உள்ள அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களிடம் தொழில் துறையினா் வலியுறுத்தினா்.

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், சிஐஐ, ஈரோடு சேம்பா் ஆஃப் காமா்ஸ், ஒளிரும் ஈரோடு ஆகிய அமைப்புகள் சாா்பில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவா் சின்னசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்களிடம், சட்டப்பேரவை உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் ஈரோடு மாவட்டத்தின் தொழில் மற்றும் வா்த்தக வளா்ச்சி குறித்து பரிசீலித்து முன்னுரிமையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு தொழில்துறை நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சொத்து வரி மற்றும் குப்பை வரி மிக அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, புதிய அரசு இந்த விஷயத்தை முதன்மையாக எடுத்து மறுபரிசீலனை செய்து, சொத்து வரி மற்றும் குப்பை வரியை குறைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திட்டமிட்ட முறையில் ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும், தொழில்பேட்டைகளில் சாலை, மழைநீா் வடிகால், தெருவிளக்கு மற்றும் கழிவுநீா் மேலாண்மை போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.