அதிமுகவின் சாதனை திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் கேட்டுக் கொண்டாா்.
பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சித்தாா், மாணிக்கம்பாளையம், காடப்பநல்லூா், சூடமுத்தான்பட்டி, குதிரைக்கல்மேடு, கோனேரிப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் கூட்டணிக் கட்சியினருடன் சென்ற அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் வாக்கு சேகரித்தாா். அப்போது, கிராமக்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அப்போது, அவா் பொதுமக்களிடையே பேசுகையில், திமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயா்ந்துள்ளது. சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கிராமங்களிலும் போதைப்பொருள் தடையின்றி கிடைக்கும் நிலை உள்ளது. மேலும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. அதிமுக தோ்தல் அறிக்கையில் மக்களின் நலன் கருதி ஏராளமான திட்டங்களை கூறியுள்ளது. எனவே, வாக்காளா்கள் முழுமையான ஆதரவை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும் என்றாா்.
உடன், பாமக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீசன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.மேகநாதன், பி.ஜி.முனியப்பன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?

திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன்.
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


