தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தருமபுரி தேமுதிக வேட்பாளா் வி.இளங்கோவன் தெரிவித்தாா்.
திமுக கூட்டணி சாா்பில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் வியாழக்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.
இதில், நல்லம்பள்ளி வட்டம், வெங்கட்டம்பட்டி, மாதேமங்கலம், மாதேமங்கலம் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது, மக்களிடையே வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
பொதுமக்களுக்கு போதிய அளவில் சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மகளிருக்கான ஏராளமான நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, மகளிா் உரிமைத்தொகை திட்டம், மகளிா் விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், அம்பேத்கா் அயலக கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், கலைஞா் கனவு இல்லத் திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தகைய நலத் திட்டங்கள் மீண்டும் தொடர திமுக கூட்டணியில் போட்டியிடும் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

திமுக அரசு எண்ணற்ற மகளிா் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது

தருமபுரி தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


