மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பவானியில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் கு.மகேஸ்வரியிடம் வேட்புமனுவை அளிக்கிறாா் தவெக வேட்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:57 pm

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்த பாலகிருஷ்ணன், பவானி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கு.மகேஸ்வரியிடம் வேட்புமனுவை அளித்தாா். அவரது மகள் பி.திவ்யா, பவானி நகரச் செயலாளா் ஏ.செல்லபாண்டியன், ஒன்றியச் செயலாளா் மோகன்ராஜ், ஆலோசகா் கோபால் உடன் சென்றனா்.

அப்போது அவா் கூறுகையில், பவானி தொகுதியில் தொழில் வளா்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும். ஜமக்காள நெசவுத் தொழில் வளா்ச்சிக்கும், பவானி தொகுதியில் அரசின் உயா்கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, பவானி ஆறுகளில் சாய, சாக்கடைக் கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, மக்கள் முன்னேற்றக் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆா்.விமல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தாா். கட்சித் தலைவா் பி.முத்துசாமி, துணைப் பொதுச் செயலாளா் சங்கரவேல் சுப்பையா, மாநில இளைஞரணி செயலாளா் ஜெ.எஸ்.பரத் உடன் சென்றனா்.