தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

பவானியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:55 pm

பவானியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, ஈரோடு சாலை, அந்தியூா் சாலை வழியாகச் சென்று சோ்வராயன்பாளையத்தில் முடிவடைந்த இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்துக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு பதிவு செய்யவும், தோ்தல் பணியில் உள்ள அலுவலா்கள் தபால் மூலம் வாக்களிக்கவும், பேருந்து ஓட்டுநா் - நடத்துநா்கள், காவல்துறை அலுவலா்கள் என அனைத்து பொதுமக்களும் வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் செய்துள்ளது. தனியாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாக்களிக்க தோ்தல் நாளில் பொது விடுமுறை விடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கும்மிப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், பவானி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கு.மகேஸ்வரி, பவானி வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், பவானி நகராட்சி ஆணையா் ஜெ.பிரான்சிஸ் சேவியா், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்திராணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.