தமிழ்நாடு அரசுப் பாடநூல் அரங்கில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் வரலாறு, சங்க கால வாழ்வியல் குறித்த நூல்கள் ஏராளமாக விற்பனையாகி வருகின்றன. தொல்லியல் துறை கொடுமணல் குறித்த தனி காட்சி அரங்கு அமைத்துள்ளதால், கொடுமணல் குறித்த தேடலும் அரங்கில் அதிகரித்துள்ளது.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வரலாற்று நூல்களுக்கு இணையாக ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான நூல்கள் விற்பனையும் அதிகமாக இருந்தது. பள்ளி
மாணவர்களைப் பொறுத்தவரை ரூ.10க்கு விற்கப்படும் திருக்குறள் நூலை அதிகமாக வாங்கிச்செல்கின்றனர். ரூ.25க்கு விற்பனையாகும் தாமஸ் ஆல்வா எடிசன், அப்துல்கலாம், விவேகானந்தர், ஜி.டி.நாயுடு உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் குறித்த நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இதுபோல் ஓவிய நூல்கள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஆங்கிலக் கதை நூல்கள், தமிழில் மேஜிக், தன்னம்பிக்கை நூல்களும் ஓரளவு விற்பனையாகின என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.