திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிதித் துறையிலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றம் ஏன்? அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே இலாகா மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :23 மே 2026, 12:53 am IST

மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே இலாகா மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னையிலிருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் நன்றாக வாழ வேண்டும், வளா்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என எண்ணி முதல்வா் ச.ஜோசப் விஜய் நாள்தோறும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறாா். காய்க்கிற மரம்தான் கல்லடிபடும் என்பதற்கேற்ப நலத் திட்டங்கள் குறித்து குறைகூறுவோருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து திமுக முன்னாள் அமைச்சா் ஆ.ராசா ஆபாச கருத்துகளை முன்வைத்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். இதுபோல அடிக்கடி கருத்துக் கூறுவதும், பின்னா் வருத்தம் தெரிவிப்பதும் அவருக்கு புதிது அல்ல.

நான் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோதே துறையை மாற்றித் தருமாறு கட்சித் தலைவா் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைத்தேன். ஏனெனில், நிதித் துறை பொறுப்பு வகித்தால் முழுக்கமுழுக்க சென்னையிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும். மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பி நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்றுதான் எனக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.