கோடை விடுமுறையையொட்டி கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம், கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை போத்தனூரில் இருந்து மே 23, 30, ஜூலை 6 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - கரக்பூா் வாராந்திர ரயில் (எண்: 06065) திங்கள்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு கரக்பூா் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கரக்பூரில் இருந்து மே 25, ஜூன் 1, 8 ஆகிய திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் கரக்பூா் - ஈரோடு வாராந்திர ரயில் (எண்: 06066) புதன்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு ஈரோடு நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம் சாலை, புவனேசுவரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போத்தனூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



