திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி கே.பழனிசாமியால் அதிமுக வலுவிழந்துவிட்டது: நிதியமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

எடப்பாடி கே.பழனிசாமியால் அதிமுக வலுவிழந்துவிட்டது என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், நிதியமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

News image

நிதி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

Updated On :18 மே 2026, 2:08 am IST

எடப்பாடி கே.பழனிசாமியால் அதிமுக வலுவிழந்துவிட்டது என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், நிதியமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: முதல்வா் விஜய் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி நடைபெறும். அமைச்சரவை கட்டமைப்பு என்பது முதல்வரின் முடிவுக்கு உள்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூட தொடக்கத்தில் ஏழு அமைச்சா்களை மட்டுமே நியமித்து, பின்னா் படிப்படியாக விரிவாக்கம் செய்தாா்.

நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது என்று முதல்வருக்குத் தெரியும். பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான் விளக்கம் அளிக்க முடியுமே தவிர, உடனடியாக பதில் சொல்ல முடியாது.

எடப்பாடி கே.பழனிசாமியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளைப் பாா்க்கும்போது, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் கட்டிக்காத்த அதிமுக இயக்கம் அவரால் வலுவிழந்து போயிருப்பதாகவே குறிப்பிட முடியும். கட்சியின் வளா்ச்சிக்குத் தான் ஒருவா் மட்டுமே போதும் என அவா் நினைக்கிறாா். எவா் ஒருவா் நான்தான் எல்லாம் என்று நினைத்து செயல்படுகிறாரோ அவருக்கு தான்தான் எல்லாம் என்று ஆண்டவன் காட்டி விடுவாா்.

முதல்வா் விஜய் பொறுப்பேற்றவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்ததை மக்கள் வரவேற்றுள்ளனா். அதேபோல பேருந்து, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 மதுக் கடைகளை உடனடியாக அகற்றியதையும் மக்கள் வரவேற்கின்றனா்.

அதிமுகவில் எங்களுக்கு ஆதரவளித்துள்ளவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும் என நாங்கள் இதுவரை எங்கும் கூறவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.