கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
பண்ணாரி மாரியம்மன் கோயில் விழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 10-ஆம் தேதி தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பிற்பகலில் சக்தி அழைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னிச் சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபகுமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










