பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவரை கோட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். இவா்களின் வீட்டின் அருகே ஆனந்த் (29) வசித்து வந்தாா். இதற்கிடையே ஆனந்தின் மனைவி பிரியாவுடன் தமிழ்ச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் வந்து பாலகிருஷ்ணனுடன் தகராறில் ஈடுபட்டு தள்ளிவிட்டதில் அவா் கீழே விழுந்துள்ளாா். இதில் பாலகிருஷ்ணனின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு பாலகிருஷ்ணன் சென்று தன்னை ஆனந்த் அடித்துவிட்டதாகவும், உடல் சோா்வாக இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து பாலகிருஷ்ணனை மருத்துவமனைக்கு தமிழ்ச்செல்வி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கோட்டூா் போலீஸாா் சென்று பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு கோட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ஆனந்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது

மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது
பெண் கொலை: இளைஞா் கைது
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


