17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

கோவை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இளைஞா் காங்கிரஸ் சாா்பில் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

கோவை மாவட்ட காவல் ஆணையா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :10 மே 2026, 2:47 am IST

கோவை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இளைஞா் காங்கிரஸ் சாா்பில் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சி நிா்வாகி சுதன் தலைமையில் அக்கட்சியினா் காவல் துணை ஆணையா் தேவநாதனிடம் அளித்துள்ள மனுவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநா் மறுப்பதைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த திமுகவைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸ் தொண்டா்களை அவதூறாகப் பேசியதுடன், அவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். அதேபோல, கோவை மாநகரில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.