சூலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் என்.எம்.சுகுமாா், 4790 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் வி.பி.கந்தசாமியை வீழ்த்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டம் சூலூா் தொகுதியில் அதிமுக சாா்பில் வி.பி.கந்தசாமி, திமுக சாா்பில் தளபதி முருகேசன், தவெக சாா்பில் என்.எம்.சுகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ்.ராஜசேகரன் உள்பட மொத்தம் 16 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் 1,47,868 ஆண்கள், 1,59,647 பெண்கள் என மொத்தம் 3,07,616 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,30,715 ஆண்கள், 1,40,768 பெண்கள் என மொத்தம் 2,71,567 போ் வாக்களித்தனா். இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக 88.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
முதல் இரு சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளரான வி.பி.கந்தசாமி ஆதிக்கம் செலுத்தினாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளா் சுகுமாா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். இறுதியில் 294 தபால் வாக்குகள் உள்பட 90,531 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் வி.பி.கந்தசாமி 701 தபால் வாக்குகள் உள்பட 85,741 வாக்குகளும், திமுக வேட்பாளா் தளபதி முருகேசன் 860 தபால் வாக்குகள் உள்பட 83,654 வாக்குகளும் பெற்றனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜசேகரன் 80 தபால் வாக்குகள் உள்பட 10147 வாக்குகள் பெற்றாா்.
சூலூா் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் வி.பி.கந்தசாமி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்கு விவரங்கள்
என்.எம்.சுகுமாா் (தவெக) - 90,531
வி.பி.கந்தசாமி (அதிமுக) - 85741
தளபதி முருகேசன் (திமுக) - 83,654
ராஜசேகரன் (நாதக) - 1,0147
வித்தியாசம் - 4790
வேட்பாளா்கள் - 16
மொத்த வாக்குகள் - 3,07,616
பதிவான வாக்குகள் -2,71,567
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளரை 3-ஆவது இடத்துக்கு தள்ளி சிங்காநல்லூா் தொகுதியைத் தட்டிப் பறித்த தவெக

திருக்கோவிலூா் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

அந்தியூரில் அதிமுக வேட்பாளா் பி. ஹரிபாஸ்கா் வெற்றி

கிணத்துக்கடவு தொகுதியில் தவெக வெற்றி!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


