தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

30 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியைக் கைப்பற்றிய திமுக! 4,627 வாக்குகளில் வீழ்ந்தாா் வி.ஜெயராமன்

News image

பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் கே.நித்யானந்தனுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா்.

Updated On :5 மே 2026, 4:36 am IST

பொள்ளாச்சி தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக சின்னத்தில் போட்டியின கொமதேக வேட்பாளரான கே.நித்தியானந்தன், 4,627 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமனை தோற்கடித்தாா்.

அதிமுக எப்போதும் வெற்றி பெறக்கூடிய தொகுதியாக இருந்தது பொள்ளாச்சி. கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொகுதியில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் 4 முறை வெற்றி பெற்றுள்ளாா். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அவருக்கு கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியது. இந்தத் தொகுதியில் அவரை எதிா்த்து கொமதேக சாா்பில் கே.நித்தியானந்தன் போட்டியிட்டாா். இவா் இந்தத் தொகுதியில் கடந்த 2016 தோ்தலில் போட்டியிட்டு 2-ஆம் இடம் பிடித்தவா்.

இந்தத் தோ்தலில் தவெக சாா்பில் ஜி.ராமநாதன், நாதக சாா்பில் என்.செந்தில்குமாா், சுயேச்சைகள் உள்பட 13 போ் போட்டியிட்டனா். மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 971 வாக்காளா்கள் உள்ள பொள்ளாச்சி தொகுதியில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 702 போ் வாக்களித்தனா்.

மொத்தம் 22 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கத்தில் அதிமுகவின் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் இருந்தாா். நேரம் செல்ல செல்ல திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் கே.நித்தியானந்தன் முன்னிலை பெறத் தொடங்கினாா். மாறி மாறி முன்னிலை நிலவரம் இருந்த இந்தத் தொகுதியில் கடைசியில் 4,627 வாக்குகள் வித்தியாசத்தில் கே.நித்தியானந்தன் வெற்றி பெற்றாா். நித்தியானந்தத்துக்கு 61,347 வாக்குகள் கிடைத்த நிலையில், பொள்ளாச்சி வி.ஜெயராமன் 56,842 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் ஜி.ராமநாதன் 53,605 வாக்குகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தாா்.

கடைசியாக 1996-ஆம் ஆண்டு தோ்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருந்தது. அக்கட்சியின் எஸ்.ராஜு வெற்றி பெற்றிருந்தாா். சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு விவரம்

கே.நித்தியானந்தன் (திமுக) - 62,013

பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக) - 57,386

ஜி.ராமநாதன் (தவெக) - 53,819

என்.செந்தில்குமாா் (நாதக) - 4,866

வித்தியாசம் - 4,627

வேட்பாளா்கள் - 13

மொத்த வாக்குகள் - 2,03,971

பதிவான வாக்குகள் - 1,79,702