பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளுக்கான கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பொங்கலூா் வட்டார பொது சுகாதாரத் துறை சாா்பில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலமாக 14 வயது உடைய பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் சுந்தரவேல், டாக்டா் ரம்யா ஆகியோா் கலந்துகொண்டு, தடுப்பூசியின் பயன்பாடு குறித்து விளக்கினா்.
அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்து சமுதாய நல செவிலியா் சின்னம்மாள், செவிலியா் ஈஸ்வரி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். இந்த வட்டாரத்தில் உள்ள இதர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், எ.வடுகபாளையம், கொடுவாய் ஆகிய பகுதியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா் பூமலா்செல்வன் மற்றும் தரவு உள்ளீட்டாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது: காஞ்சிபுரம் ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


